மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 இற்கு முன்னர் கொவிட் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி அவர்களால் சுகாதார பிரிவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளதுடன் (03) தற்போது நடைபெற்று வருவதாக வைத்தியர் ரிகாஸா காமில் சியன நியூஸிற்கு தெரிவித்தார்.

தகுதியுடையவர்கள் அனைவரும் அதில் பங்குபற்றுமாறு வைத்தியசாலை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.