இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘இறப்பர் சீல்’ ஆக மாற்றப்பட்டுள்ளனர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

“நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை இனங்காணாது அமைச்சுப் பொறுப்புகளை பிரித்து கொடுப்பதன் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது” என்றார்.

“பாராளுமன்றத்துக்கு யார் வந்தாலும், யாருக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் பிரச்சினை அவ்வாறே இருக்குமெனத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, அமைச்சர்களை விடவும் ஆகக் கூடுதலான அதிகாரங்களை கொண்டிருந்த தலைவராகவே பசில் ராஜபக்‌ஷ இருந்தார்” என்றார்.

குருநாகல், கல்கமுவ பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் (01) சந்தித்து கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.