நேற்று (27) ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர்,ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டானைத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்த கருத்துக்கள்;

இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றால் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் மூலம் தான் இயலும். இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மூத்த அமைச்சராகவும் அந்த அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கினேன். ராஜபக்‌ஷர்கள் குறித்து நாங்கள் தெரிந்ததால் தான் ஏலவே மக்களை தெளிவூட்டினோம்.அவர்களின் செயற்பாடுகளை எங்கள் சொந்தக் கண்கள், காதுகள் உணர்ந்தன. அதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும்  ராஜபக்சர்களின் உன்மைகள் பற்றி நான் மக்களிடம் சொன்னேன். இருப்பினும், அவர்கள் 60 இலட்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

எனது மகன் வைத்தியர்,அப்பா என்று என்னை அழைத்து கூறினார் “களனி கங்கையில் ஒரு நாகப்பாம்பு எழுந்துள்ளது என்பதையும்,அதை பார்வையிட தான் சொல்லவிருப்பதாகவும் பார்ப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்பதையும் அவர் சொன்னார்கள். நீங்கள் செல்ல வேண்டாம்,வேண்டுமொன்றால் தாயைச் சென்று பார்க்குமாறும் கூறினேன்.இந்தளவு அவர்கள் இனவெறி மற்றும் மத வெறித்தனத்தைத் தூண்டிவிட்டு மக்களின் பார்வையை திசை திருப்பி வாக்களிக்கச் செய்தனர்.ஆனால் நாட்டை மாற்றும்  ஒரு திட்டமான நிர்வாக ஆட்சி இல்லை, ஆனால் வியத்மக மூலம் நடுத்தர வர்க்கம் படித்த மற்றும் புத்திசாலித்தனமான மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இன்று வியத் மகவும் உறுப்பினர்களும் எங்கு இருக்குறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.பழைய வழி எப்படி இருக்கிறது என்பதை நாம் காணலாம்.கம்பஹ மாவட்ட வியத்மக அமைச்சர் ஒருவர் ஆமைகள் சரியான நேரத்தில் தான் இறக்கின்றன என்று கூறினார்.

நானும் முன்னாள் வனவிலங்கு அமைச்சர். அத்தகைய பொய்யை ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இன்று அந்த வியத்மக அமைப்பு மாறிவிட்டது, மக்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டார்கள், மக்களால் வாழ முடியவில்லை என்பதே காரணம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இன்று இந்த நாடு ஒரு சமூக-அரசியல் மற்றும் பொருளாதார பேரழிவை நோக்கி செல்கிறது. ருவன்வெலி தூபிக்கு அருகிலுள்ள அந்த வரலாற்று இடத்தில் பதவியேற்ப்பு நிகழ்வில் மக்கள் ஹூ சத்தம் இட்டனர்,ஹு சத்தத்திலிருந்து ஆரம்பித்து ஹூ சத்தத்திலிருந்து வீடு செல்லும் காலம் தொலைவில்லில்லை. 

12.6 டிரில்லியன் டொலர்கள்  கடன் உள்ளது. அன்றாட வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளி 200 மில்லியன் ஆகும், அதனால்தான் இந்த நாட்டின் சேவைகளின் பரிதாபகரமானதாகவுள்ளது.

நாளை அல்லது நாளை மறுநாள் ஒரு டின் மீனைப் பெற மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் . பயிர் விதைகளை வாங்க நாம் வரிசையில் காத்திருக்க வேண்டும், எண்ணெய் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டும், இன்று நாம் கொஞ்சம் உரங்களை வாங்கக் கூட வரிசையில் காத்திருக்க வேண்டும்.காபனிக் உரங்கள் நாட்டில் உள்ளன என்று நாட்டில் ஒரு பெரிய கட்டுக்கதை உள்ளது. நான் ஒரு விவசாயி, ஒரு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர், நான் உருளைக்கிழங்கை பயிரிடும் ஒரு விவசாயி,எனக்கு தெரிந்தளவில் காபனிக் உரங்களால் மாத்திரம் சகலதையும் நிவர்த்தி செய்ய முடியாது.நம் நாட்டில் விவசாயத்தை காபனிக் உரங்களை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாது என்பதை நாங்கள் அறிவோம். செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மந்தநிலைக்கு காரணம் மண் அரிப்பு மற்றும் மண் அடுக்குகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம் எளிதான செயல் அல்ல. சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் ஒரு பாரம்பரிய விவசாயத்தை வைத்திருக்கிறோம். அது உயர் மட்டத்தில் இருந்தது.  தற்போதைய விவசாய இராஜாங்க அமைச்சர் ஒரு தேயிலை மரத்தை கூட நடவில்லை.ஒரு அறிவியல் சூழலுக்கு ஏற்ற ஒரு விவசாயம் நம் நாட்டில் இருந்தது.

இலவச உரத்தை வழங்குவதாக வாக்குறுதி அளித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இன்று விவசாயி மீளமுடியாத கஷ்டத்தில் விழுந்துள்ளார். இது ஒரு ஆபத்தான விஷயம். இந்த அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது. மக்கள் வரிசையில் பரிதாபமாக உள்ளனர்.

எங்கள் உழைப்பு வெறும் பரிதாபகரமானது. நாளை ரொட்டி வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒரு கலன் எண்ணெயைப் பெறுவதற்கு நாம் வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒரு டின்மீனைப் பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டும். அதனால்தான், உண்மை என்னவென்றால் இந்த நாடு பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தால் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் அதிக வரம் கொடுத்தார்கள், எனவே நாட்டை அபிவிருத்தி செய்ய ஏன் ஒரு திட்டத்தை உருவாக்கக்கூடாது? ஒரு குடும்பத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது எதற்கு, எண்பது சதவிகித அரசு நிறுவனங்கள் ராஜபக்ஷர்களின் கைகளில் உள்ளன. வரவு செலவு திட்டத்தின் 80% நிதி அவர்களிடம் தான் உள்ளது. இன்று உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் நிதிகளிலும் தலையிட பசில் முனைந்துள்ளார்.அமைச்சர்கள் சுயாதீனமாக கருமமாற்ற முடியாது. இதுபோன்றே அனைத்து அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்பத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு செய்தித்தாளின் படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் படத்துடன் ஜனாதிபதிக்கும் ஸ்ரீ.ல.சு.க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக இருந்தது என்று பிரசுரமாகி இருந்தது.அது வெற்றிகரமாக இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சுதந்திரக் கட்சிக்கு ஒருபுறம் சித்தியின் கவனிப்பைப் போலான கவனிப்பை நாம் காண்கிறோம். மறுபுறம் ஜனாதிபதி ஒரு வழியிலும், பசில் வேறு வழியிலும் செல்வதைக் காண்கிறோம். முதலில் இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ தான் கட்டியெழுப்பினார் என்று நினைத்தேன். பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக, அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளின் அமைச்சுகளும் திட்டங்களில் தலையிட்டு எல்லா பணத்தையும் இழுத்தவர் பசில்.தோல்விக்கு பின்னர் வெளிநாடு சென்று  அவர் மீண்டும் இலங்கைக்கு வந்து இப்போது ஒரு ஹீரோவாக இருக்கிறார்.பசில் விசில் சத்தம் மட்டுமே,விசிலுக்கு ஏற்ற செயற்திறன் இல்லை. அமைச்சரவை தோல்வியடைகிறது.

ஐக்கிய மக்கள் சக்திக் கட்சி ஒரு வலுவான நிலையில் உள்ளது.

கோதபயா ஜனாதிபதியாக இருப்பதை நான் ஏற்கிறேன். கோதபயா எனதும் ஜனாதிபதி. நாட்டின் அனைத்து மக்களின் ஜனாதிபதி தான்.எனவே நாடு இவ்வாறு பின்நோக்கி செல்வதை நான் விரும்பவில்லை.ஜனாதிபதியால் சரியாக செய்ய முடியாவிட்டால், அவர் வெளியேற வேண்டும். ஆசிரியர்களின் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். அதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும்.

ரிஷார்ட்டின் வீட்டில் மட்டுமல்லாமல், இதுபோன்ற குழந்தைகள் அநீதிகளுக்கு உட்படுத்தப்படும் பிற இடங்களிலும் அரசாங்கம் விசாரித்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by Samagi Jana Balawegaya on Monday, July 26, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.