ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி தீ காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.குறித்த நபர்கள் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சிறுமியின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த சடலத்தை தோண்டி எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Adaderana