நாளை (12) முதல் தாம் ஒன்லைன் கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர் சங்க தலைவர்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டமை, கல்வியை தனியார்மயப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக தாம் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதனடிப்படையில் நாளை அதிகாலை 6 மணி முதல் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்லைன் கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்படி தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்க பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.