விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா ஸ்வர்ணமாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி - நுகவெல பிரதேசத்தில் உபேக்ஷா ஸ்வர்ணமாலி பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதனையடுத்து அதில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா ஸ்வர்ணமாலி இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Update:
கைது செய்யப்பட்ட உபேக்ஷா ஸ்வர்ணமாலி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் செலுத்திய வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் வாகன பரிசோதகர் ஒருவரினால் அந்த வாகனம் சோதனையிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Siyane News)