ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் PCR பரிசோதனையின் போது தாதி ஒருவரின் தலையில் பீங்கான் கோப்பையால் தாக்கிக் காயப்படுத்திய பிக்கு ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலையில் பலத்த காயமடைந்த தாதி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

PCR பரிசோதனையின் போது ஏற்பட்ட வலி காரணமாகவே பிக்கு குறித்த தாதியை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.