நாளாந்தம் பதிவாகும் கொரோனா மரணங்களில், 60 வயதிற்குட்பட்டவர்களின் மரண வீதம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த 15 ஆம் தேதி முதல் இன்றுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களில், 60 வயதிற்குட்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 37 க்கும் 40 க்கும் இடையில் காணக்கூடியதாக உள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் மரணங்களில் 39 பேர், 60 வயதிற்குட்பட்டவர்கள்.

நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 186 ஆகும். அவர்களில் நான்கு பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் பெண். ஏனைய மூவரும் ஆண்கள் ஆவர். மேலும் 35 பேர், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்களில் 18 பெண்களும் 17 ஆண்களும் உள்ளனர்.

அத்தடன், 147 பேர், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். அவர்களில் 56 பெண்களும் 91 ஆண்களும் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களே, நேற்றைய தினம் இவ்வாறு உறுதிசெய்யப்பட்டுள்ளன.

கடந்த 17 ஆம் திகதியும் 170 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 40 பேர், 60 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

கடந்த 16 ஆம் திகதி பதிவாகிய மரணங்களில் 39 பேர், 60 வயதிற்குட்பட்டவர்கள். 15 ஆம் திகதி பதிவாகிய 167 மரணங்களிலும் 37 பேர் 60 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.