(ரிஹ்மி ஹக்கீம்)

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் நேற்றிரவு (28) வீசிய கடுமையான காற்றினால் 82 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட அனர்த்த நிவாரண உதவிப் பணிப்பாளர் அஜித் நிசாந்த தெரிவித்தார்.

இதனால் ரன்பொகுணுகம வீடமைப்பு திட்டத்தில் சுமார் 30 வீடுகளுக்கும் திஹாரிய, யடியன, மல்வத்த, மாஇபுல பிரதேசங்களில் சுமார் 30 வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.