விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியைப் பெற்ற சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் சீரியலில் சங்கவி கதாபாத்திரத்தில் நடித்த மோனிஷா, தன்னை சீரியலில் இறந்த மாதிரி காட்டியதற்கான காரணம் என்ன என்று தெரிவித்து சீக்ரெட்டை உடைத்துள்ளார்.

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் சீரியல்களே கோலோச்சுகின்றன. பார்வையாளர்களும் சீரியல்களையே விரும்பி பார்த்து வருகிறார்கள். கையடக்க மொபைல் போனில் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய சீரியலை பார்த்துக்கொள்ளலாம் என்ற அளவில் தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையிலும் சீரியல்கள் ரசிகர்களிடையே பெரிய செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது. 

அந்த வகையில், விஜய் டிவியில் அக்டோபர் 30, 2006ம் ஆண்டு முதல் ஏப்ரல் 25, 2008 வரை ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இளைஞர்களை பார்வையாளர்களாக குறிவைத்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் சீரியல் 90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. 90ஸ் கிட்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியல், 2006ம் ஆண்டு பள்ளிக்கூடம் சென்ற பதின் பருவ சிறுவர்களை ரசிகர்களாக மையமாக வைத்து ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் ஒளிபரப்பான காலத்தில் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.

கனா காணும் காலங்கள் சீரியல் முடிவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த சீரியலில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பலரும் தற்போதும் டீவி சீரியல்களிலும் சினிமாக்களிலும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், அண்மையில், கனா காணும் காலங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், சீரியலில் நடித்த பெரும்பாலான கலந்து கொண்டனர். ஆனால், இந்த தொடரில் சங்கவியாக நடித்து வந்த மோனிஷா வரவில்லை. அவர் தற்போது மருத்துவராக இருக்கிறார்.

இந்த ரீ யூனியன் சந்திப்பில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ள மோனிஷா அந்த சீரியலில் தன்னை ஏன் இறந்த மாதிரி காட்டினார்கள் என்பது குறித்த ரகசியத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து மோனிஷா கூறியிருப்பதாவது. “கனா காணும் காலங்கள் ரீ யூனியனில் கலந்துகொள்ள என்னையும் அழைத்தார்கள். எனக்கும் கலந்து கொள்ள மிகவும் ஆசையாகத்தான் இருந்தது. ஆனால், வருடத்திற்கு இரண்டு முறைதான் சென்னை வருவேன். கடந்த பிப்ரவரி மாதம் தான் கடைசியாக சென்னை வந்து திரும்பினேன். அதனால்தான், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.மேலும், மோனிஷா கனா காணும் காலங்கள் சீரியல் பற்றி கூறுகையில், “சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஒருகட்டத்துல எனக்கு மெடிக்கல் கிளாஸ் ஆரம்பிச்சிட்டதால என்னால தொடர்ந்து ஷூட்டிங் வர முடியவில்லை, வேற வழி இல்லாமத்தான் என்னை செத்துப்போன மாதிரி காட்டிட்டாங்க. நான் இறந்துபோன எபிசோடு ஒளிபரப்பான அடுத்த சில தினங்களில் ரசிகர்கள் சிலர் எங்கள் வீட்டைக் கண்டுபிடிச்சு வந்துவிட்டார்கள். அவங்களைச் சந்தித்து நாலு வார்த்தை பேசிய பிறகே திரும்பிப் போனார்கள்” என்று கூறியுள்ளார்.

கனா காணும் காலங்கள் சீரியலில் சங்கவியாக நடித்த மோனிஷா, தன்னை ஏன் அந்த சீரியலில் இறந்தது மாதிரி காட்டினார்கள் என்று ரகசியத்தை உடைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.