கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் கம்பஹா மாவட்டத்தில் 1242 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பியகமை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 156 தொற்றாளர்களும் வத்தளை மற்றும் கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முறையே 145, 135 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 

இது தவிர ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் பின்வரும் எண்ணிக்கைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை - 89

தொம்பே - 82

மீரிகமை - 81

களனி மற்றும் ராகமை - 80

கட்டான - 66

திவுலபிடிய - 56

அத்தனகல்ல - 50

ஜா எல - 41

சீதுவை - 25

(Siyane News)

Source 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.