நாட்டில் தற்போது கொவிட் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதன் காரணமாக திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சமூகமளிக்கும் மக்களின் எண்ணிக்கையினை வரையறுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவ தளபதி சவேந்திர சில்வா (06) தெரிவித்தார்.

அதன்படி 500 இற்கு அதிக ஆசனங்களைக் கொண்ட திருமண மண்டபத்தில் 150 பேருக்கு மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆசனங்களின் எண்ணிக்கை 500 இனை விட குறைவு எனின் 100 பேருக்கு மாத்திரமே அனுமதிக்கப்படும்.

மரண நிகழ்வுகளுக்கு அதிக பட்சம் 25 பேருக்கே கலந்து கொள்ள முடியும்.

சகல அரச நிகழ்வுகளும் செப்டம்பர் 01 வரை பிற்போடப்படும்.

அரச உத்தியோகத்தர்களின் வருகை தொடர்பில் நிறுவன தலைவர் தீர்மானம் எடுக்க வேண்டும்.

(Siyane News)




2021.08.06 පවතින කොවිඩ් වසංගත තත්ත්වය පිළිබඳ ආරක්ෂක මාණ්ඩලික ප්‍රධානී, යුද්ධ හමුදාධිපති සහ කොවිඩ් 19 පැතිරීම වැළැක්වීමේ ජාතික ක්‍රියාන්විත මධ්‍යස්ථාන ප්‍රධානී ජෙනරල් ශවේන්ද්‍ර සිල්වා සිදුකළ විශේෂ ප්‍රකාශය

Posted by Department of Government Information - Sri Lanka on Friday, August 6, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.