தடுப்பூசி என்னவென பார்க்காது, கிடைக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்களிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசியை தேர்ந்தெடுப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு, 60 வயதைக் கடந்த அனைவரும் அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 70 - 80 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழப்பதாகவும், எந்தவிதமான தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ளாதவர்களே இவ்வாறு உயிரிழப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவும், செப்டெம்பர் இறுதிக்குள் நாட்டிலுள்ள பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.