2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடா


த்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் முழுமையான விவரங்களை கூற முடியவில்லை என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 311 சந்தேகநபர்கள் தடுத்துவைத்து அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்தே, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த விடயங்களை தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தெளிவின்மையால், சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுவதாகவும் தெரிவித்த அவர், சந்தேகநபர்கள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் ஆகும் என்றார்.

தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுள் புத்தி ஜீவிகள் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இவர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.