அர்க்கம் அன்ஸார் - களுத்துறை

களுத்துறை மரிக்கார் வீதி சமூக அமைப்பினால் கொவிட்19 டாஸ்க் போர்ஸ்க்கு வைத்திய பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கிவைப்பு!

நாட்டில் கொவிட்டின் நான்காவது அலையின் வேகம் பாரதூரமாக இருப்பது நாம் அறிந்தது.இந் நிலையில் களுத்துறை தெற்கில் கொவிட் தொற்றாளர்களும்,மரண வீதமும் அதிகரித்துள்ள நிலையில் களுத்துறை தெற்கு வைத்தியர்கள் உட்பட ஏனைய துறைசார்ந்தவர்கள் இணைந்து கொவிட் 19 டாஸ்க் போர்ஸ்க் எனும் பெயரில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றை ஆரம்பித்துள்ளது.இதற்கு பல்வேறு அமைப்புகள் உதவி வருகின்ற நிலையில் இன்று (28) களுத்துறை மரிக்கார் வீதி சமூக சேவை அமைப்பான (KMS FOUNDATION) அமைப்பின் மூலம் களுத்துறை வைத்தியர்கள் மூலம் இயங்கி வருகின்ற COVID 19 TASK FORCE அமைப்பிற்கு 150 வைத்திய பாதுகாப்பு ஆடைகள் (PPA KITS) நன்கொடையாக வழங்கி  வைக்கப்பட்டது.   

இந்த நிகழ்விற்கு COVID 19 TASK FORCE அமைப்பின் சிரேஷ்ட வைத்தியர்களான, வைத்தியர் முன்பாய்ஸ் , வைத்தியர் ஆமில் ஜொவ்ஸி மற்றும்  வைத்தியர் zஸுரி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

களுத்துறை மரிக்கார் வீதி சமூக சேவை  (KMS FOUNDATION) அங்கத்தவர்கள் , மரிக்கார் வீதி பள்ளி நிர்வாகிகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நன்கொடையை வழங்கிவைப்பதற்கு  பங்காற்றிய களுத்துறை மரிக்கார் வீதியைச் சேர்ந்த வெளிநாடுகளில் தொழில் புரியக் கூடிய நலன் விரும்பிகள் மற்றும் களுத்துறை மரிக்கார் வீதி சமூக அமைப்பின் (KMS FOUNDATION) அங்கத்தவர்கள் மற்றும் மரிக்கார் வீதியைச் சேர்ந்த அனைத்து நலன் விரும்பிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறித்த அமைப்பின் பிரதான அங்கத்தவர்கள் தெரிவித்தார்கள். 







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.