இன்று (21) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த கருத்துக்கள்:ஜனாதிபதி தனது நேற்றைய உரையை 16 நிமிடங்களுக்குள் முன்னைய உரைகளை விட குறைத்துக் கொண்டார்.பொருளாதாரம்,கொவிட் விடயங்கள் குறித்து பல விடயங்களை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். பிரதான எதிர்க்கட்சியாக எமது நிலைப்பாடுகளை முன்வைப்பது எமது கடமையாகும். 

தடுப்பூசி விடயத்தை முன்னுரிமையாக பேசியிருந்தார். முட்டிகளை ஆற்றில் இடுவது, பாணிகளை குடிப்பது போன்ற மாயைகளுக்கு பின்னால் செல்லாது விஞ்ஞான ரீதியான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திற்கு உள்ளேயேயும் வெளியேயும் தொடர்ச்சியாக கூறியது.ஏலவே தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு கூறினோம்.விஞ்ஞான ரீதியான விடயங்களை சுட்டிக்காட்டிய போது,தேசிய உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்காதவர்கள் என்று எங்களை குற்றம் சாட்டினர்.உலக நாடுகள் தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்டியத்த போது இலங்கை மாயைகளுக்கு பின்னால் சென்றது. தேசிய ஔதட கட்டுப்பாட்டுச் சபை முறையான ஒழுங்களைப் போனி,விலைமனுக் கோரி,கொள்வனவு மனுவைக் கோரி முற்பணம் கொடுத்திருப்பின் உரிய நேரத்திற்கு எங்களுக்கு தடுப்பூசி கிடைத்திருக்கும்.தாமதமாகிய ஒவ்வொரு நிலைமைகளுக்கான பொறுப்பையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் இந்த அரசாங்கமே பொறுப்பெடுக்க வேண்டும். 

இந்தியாவிலிருந்து கொவிஷலிட் ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை முதல் முறையாக கொள்வனவு செய்யும் போது மேலும் கூடுதலாக கொள்வனவு  செய்திருப்பின் தற்போதைய நிலை ஓரளவு குறைந்திருக்கும். உலக நாடுகள் பின்பற்றும் தடுப்பூசி ஏற்றலில் முன்னுரிமை ஒழுங்கு பேனப்பட்டதா என்றும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளிடம் வினவ வேண்டும். 

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் 98% பூர்த்தி செய்யப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்,அது முதலாம் டொஸ் மாத்திரமே.இரண்டாம் டொஸ்சும் வழங்கப்பட்ட பூரண நிலையல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம். 

இலங்கையில் மாத்திரம் தான் 60 வயது முற்ப்படுத்தலை விட 30 வயது முற்படுத்தலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட ஒரே ஒரு நாடு. இலங்கையில் மரனித்த 80% வர்கள் 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள். வைத்தியர்கள் கூறுவது போன்று 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி கிடைக்காமையே இதற்கு பிரதான காரணமாகும்.இந்த நிலையால் மரனித்தவர்களுக்கு இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

சைனேர்பாம் தடுப்பூசி ஏற்றி மாத்திரம் போதாது. ஏலவே இதற்கான அனுமதி கிடைக்காமைக்கான காரணம் உலக சுகாதார ஸ்தாபனமாகும்.சைனோர்பாம் உற்பத்தி நிறுவனம் உரிய விடயங்களை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு வழங்காமையே இதற்கு பிரதான காரணம். அனுமதியற்ற உரிய தரமற்ற தடுப்பூசியை ஏலவே கொள்வனவு செய்த காலதாமத்திற்குரிய பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்.இதை வேறு தரப்புக்கு குற்றம் சாட்டுவது பொறுத்தமற்ற ஓர் விடயம். 

ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஏலவே ஒரு இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் டொஸ் வெறுமனே 30 % வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டம் மீதமுள்ள 70 % மானவர்களுக்கு வழங்காமல் எவ்வாறு பிரதிபலன்களை எதிர்பார்க்க முடியும். இவ்வாறு இது சாத்தியம் என்று வினவுகிறோம்.

சுற்றுலாத்துறை மூலம் 4.5 பில்லியன் அமொரிக்க டொலர் இலாபம் ஈட்டியதாக ஜனாதிபதி கூறினார்.ஆனால் உதயங்க வீரதுங்க மூலம் உக்ரைனிய சுற்றுலாப்பயணிகள் இங்கு அழைத்துவரப்பட்டு பரீட்சார்த்தம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.அதை பசில் ராஜபக்‌ஷவே வெளிப்படையாக கூறியிருந்தார். இதனால் ஏற்ப்பட்ட புதிய பரவலுக்கும் இந்த அரசாங்கமே பொறுப்பெடுக்க வேண்டும். 

கடந்த காலங்களில் அத்தியவசி சேவைகளை மாத்திரம் தான் முன்னெடுத்ததாக கூறினார்.ஆனால் ஜனாதிபதியின் செயலாளர் பொது நிர்வாக அமைச்சின் ஊடாக சகல அரச ஊழியர்களையும் சேவைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தார்.பின்னர் அந்த வரத்தமானியையும் ரிவர்ஸ் பன்னினார்கள். 

கொவிட் பரவல் குறித்த தெளிவுடனயே அரசாங்கம் செயற்ப்பட்டது என்பதற்கு அரசாங்கம் முன்வைக்கும் தர்க்கங்களிலிருந்தே தெளிவாக தெரிகிறது. 

ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் மூலமே இந்த நிலைமை ஏற்ப்பட்டதாக கூறுகிறார்கள்.அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று தற்போது 16 நாட்கள் கடந்து விட்டன. ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்களால் இந்த நிலை ஏற்ப்படவில்லை.சமூக பரவல் மூலமே ஏற்ப்பட்டது. அதிபர் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதற்கு இடம் கொடுத்ததும் இந்த அரசாங்கமே. இதற்கான பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். அரசாங்கம் ஆர்ப்பாட்டங்கள் தான் இதற்கு காரணம் என்று கூறினால் நாவலப்பிடிய நகர சபை தவிசாளர் மாற்றத்தோடு நாவலப்பிடிய நகரில் மஹிந்தானந்த அலுத்கமகே பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.பசில் ராஜபக்‌ஷ நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது நாடளாவிய ரீதியாக அரசாங்க தரப்பே பல்வேறு வெகுஜன பேரணிகளை முன்னெடுத்து நாடகங்களை அரங்கேற்றனர். 

நேற்றைய ஜனாதிபதியின் உரையில் தொடர்ச்சியாக முடக்கம் முன்னெடுக்கப்பட்டால் சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார்.

 ஆம், இந்தப் பேரழிவில் இருந்து மீழுவதற்கு நங்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.என்றாலும்,பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் மற்றும் சிசிர ஜயகொடி அமைச்சர் போன்றோர் முன்வைத்த கருத்துக்களிலிருந்து ஒரு சந்தேகம் எழுகிறது.அது தான் சம்பளங்களை குறைப்பதாகும்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆரம்ப ஒன்றரை மாதங்களில் தனது கஜமித்துரு நண்பர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதால் அரசாங்கம் தனது வருமானத்தில் 800 பில்லியன் வருமானத்தை இழந்தது. கஜமித்துரு நண்பர்கள் இலாபம் பெற்றனர். இலங்கை பங்குச் சந்தையில் பெயரிடப்பட்டுள்ள கஜமித்துரு நண்பர்களின் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டிலும் இவ்வருட நிதியாண்டின் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான பருவங்களில் அதிக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இலாபங்களை பெற்றுள்ளனர். இத்தகைய இக்கட்டான நிலையில் ஊழியர்களின் சம்பங்களைக் குறைக்காமல் அவர்களை கவனிப்பது இவ்வாறு இலபங்களைப் பெற்ற நிறுவனங்களுக்குரிய பெறுப்பாகும். இத்தகைய நிறுவனங்கள் அபரிமிதமாகப் பெற்ற இலாபங்களை இலங்கை புதிய முதலீடுகளுக்கும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். 

அதே போல் அரச ஊழியர்களின் சம்பளங்களை குறைப்பதற்கும் இந்த அரசாங்கம் யோசனைகளை முன்வைப்பதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.அரசாங்கம் 880 பில்லியன் பணத்தை அச்சடித்துள்ளதால் அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.120 ரூபா பருப்பு 200 வரை சென்றுள்ளது.சீனி 180 ரூபா வரையும் மரக்கறி பழ வகைகள் உட்பட சகல அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் 10000 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதற்கு பின்னர் இந்த அரசாங்கம் ஒரு சதமேனும் அதிகரிப்பை வழங்காது குறைக்கப்பார்க்கிறது.வருமானம் குறைந்து செலவு அதிகரித்துள்ளது.எனவே அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பை ஏற்க முடியாது.

முடக்க காலத்தில் 5000 ரூபா வழங்கினார்கள் இரண்டாம் கட்டத்தில் மொட்டுக்கட்சியின் பிரதேச அரசியல் தலைவர்களின் தலையீட்டால் உரிய தரப்பிற்கு கிடைக்கவில்லை.இது குறித்த தரவுகளை பிரதேச செயலாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதே போல் தான் 10000 ரூபா நிவாரனப் பொதியம்.

தற்போது 2000 ரூபா வழங்க முயற்சிக்கின்றனர்.இந்த 2000 ரூபாவால் என்ன தேவையை நிறைவேற்ற முடியும். 

ஜனாதிபதியின் நேற்றைய உரையை இந்த அரசாங்கத்தின் தமது fact check ஆக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொள்கிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.