எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள்.

இந்த நாடு பாரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மற்றும் இந்திய உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இதன் பரவல் அநிகரித்துள்ளதாக சுகாதார தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 26 இல் நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆகவும், மரணங்கள் 47 ஆகவும் பதியப்பட்டது.30 ஆம் திகதியளவில்  இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆகவும் தொற்றாளர்கள் 2455 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஜனாதிபதி கூறினார். ஒரு வாரத்திற்குள் 10 ஆயிரத்தையும் தான்டியுள்ள நிலையில் எவ்வாறு மக்கள் புள்ளிவிபரங்களை நம்பாமல் இருக்க முடியும்.இது ஆபத்தான விடயமாகும்.நாளுக்கு 50 வீத மரணங்கள் ஏற்ப்பட்டால் மாதம் ஒன்றிற்கு 1500 பேர் மரணிப்பதாகும். இவ்வாறு மரணங்கள் அதிகரிக்கும் போது இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், தடுப்பூசி போடமாறும் அரசாங்கம் கூறுகிறது. இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். அவ்வாறு எனில் தடுப்பூசி மாத்திரம் இதற்கு உகந்த தீர்வல்ல என்று புலப்படும் நிலையில் சகல அரச ஊழியர்களையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடக வெளியீடுகளை அறிவிக்கிறது.அரசாங்கம் ஒவ்வோரு வடிவங்களில் கோவிட் சட்டங்களை விதித்துள்ளது.  திருமண மற்றும் மரண வீடுகளுக்கான வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இவ்வாறு இருக்கும் போது அனைத்து ஊழியர்களையும் பணிக்கு வருமாறு அரசாங்கம், ஜனாதிபதி செயலாளர் அறிக்கை வெளியிடுகிறது. அரசு சுகாதார பிரிவு வெளியிட்ட அறிவிப்புக்கும், அனைத்து ஊழியர்களும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் வெளியிட்ட அறிவிப்புக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளது. சகல அரச ஊழியர்களையும் கடமைக்கு அழைக்கும் போது, ​​ஏராளமான மக்கள் கொழும்புக்கு வருவர்,போக்குவரத்தில் எந்த விதத்திலும் சுகாதாரச் சட்டங்கள் பின்பற்றப்படவில்லை என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் கொள்கையையா அரசாங்கம் பின்பற்றுகிறது? 2000 தொற்றாளர்கள் இனம் காணப்படும் போது பிசிஆர் பரிசோதனைகளை வெகுவாக குறைத்துள்ளனர். 

இந்த அரசாங்கம் எடுத்த தவறான கொள்கைகளால்தான் இது நடந்துள்ளது. சுகாதாரத் துறை மற்றும் துறை சார் வல்லுநர்கள் அளித்த அறிவுறுத்தல்களை அரசாங்கம் பின்பற்றவில்லை. உரிய நேரத்தில் முடக்கச் சொன்ன போது அதை கேட்காமல் பின்னர் தான் நாட்டை முடக்கினர்,தடுப்பூசி குறித்துக் கூறிய போது உரிய நேரத்தில் செயற்ப்படாது, பானிகளின் பக்கம் சொன்று காலம் தாழ்த்தியே ஞானம் பிறந்தது.தேர்தலை பிற்போடுமாறு கூறவும் அதையும் பொறுட்படுத்தவில்லை.மீண்டும் ஏப்ரல் மாதம் ஆபத்துகள் பற்றி கூறப்பட்டும் கூட ஏப்ரல் 17 க்கு பிறகு தான் நாடு மூடப்பட்டது. நாம் பார்க்கக்கூடிய விஷயம் என்னவென்றால், சுகாதாரம் பற்றி அறிந்த நிபுணர்களின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றவில்லை மாறாக அரசியல் கொள்கைகளைத் தான் கொரோனா விடயத்திலும் பின்பற்றினர்.இதனால் தான் தொற்றாளர்களும் மரணங்களும் அதிகரிக்கின்றன.

டொனால்ட் டிரம்ப் அதைத்தான் செய்தார் மரணிபரபவர்கள் மரணிக்கட்டும் என்றார்.இங்கும் அதே கொள்கை தான் பின்பற்றப்படுகிறது.என்டிஜனட் பரிசோதனை மேற்கொள்ளாது ஜனாதிபதி செயலகத்துற்குள் இன்று சாதாரண மக்களால் உள் நுழைய முடியாது.ஒரு தரப்பு மாத்திரம் மூடிய அரைகளுக்குள் இருந்து கொண்டு அப்பாவி மக்களை மரணத்திற்கு இட்டுச் செல்கின்றனர்.

அப்பாவி மக்கள் குழுக்கள் அதனால் வெகுவாக பாதுக்கப்பட்டுள்ளனர். அந்த மக்கள் தினசரி வருமானம் பெறுபவர்கள்,  இன்று இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த பிரிவினர்.இந்த நிலமையை எதிர்கொள்வது அவர்களுக்கு கடினம். அரசாங்க தரப்பு  ஆன்டிஜன் மூலமே மக்களை சந்திக்கிறது.அரசாங்க தரப்பு பாதுகாப்பாக இருந்து கொண்டு சாதாரண மக்களை சேவையிலும் உழைப்பிலும் ஈடுபடுமாறு கூறி மக்களை மரணத்திற்கு இட்டுச் செல்கிறது. ட்ரம்பின் கொள்கை தான் கோட்டாவின் கொள்கையா? இது தானா சௌபாக்கியத்தின் தொலைநோக்கு?அது தான் இன்றைய கொள்கை. இதற்கெல்லாம் அரசாங்கம் பொறுப்பாகும், ஏனெனில் அரசாங்கம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. அரசாங்கம் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவில்லை. இப்போது மக்கள் பீதியுடன் இருக்கும் நிலையில் தடுப்பூசுகளுக்காக  உலகம் முழுவதும் ஓடுகிறார்கள்.விடய ரீதியான தீர்வுகளை விட்டு விட்டு அரசாங்கம் அரசியல் முடிவுகளை எடுத்ததன் விளைவுகளால் இன்று மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எரிவாயு விலை பற்றி பேசினார். இன்று சந்தையில் 30% எரிவாயுவை லாஃப்ஸ் நிறுவனமே உற்பத்தி செய்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் டொலர்கள் பற்றாக்குறை காரணமாக இது இன்று கைவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று சந்தையில் எரிவாயு பற்றாக்குறை உள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் மாத்திரம் தான் தற்போது உற்ப்பத்தி செய்கிறது அதுவும் மொத்தத் தோவையில் 30% மட்டுமே. நாட்டில் இன்று எரிவாயு சிலின்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.பான் வாங்குவதும் மக்களால் சிறமமாகவுள்ளது. இப்போது ஒரு எரிவாயு சிலிண்டர் வாங்க ரூ.8,000 செலுத்த வேண்டும். மக்களை ஏமாற்ற ஒரு பொய் பயன்படுத்தப்பட்டது போல் பந்துலவின் மாவட்ட மட்ட விலைகள் நிர்னயுக்கப்பட்டுள்ளது.

மக்களை தொடர்ச்சியாக ஏமாற்ற வேண்டாம்.மக்களை ஏமாற்றும் 

அமைச்சர்,இராஜினாமா செய்ய வேண்டும். வர்த்தமானி வெளியிட்டு சாத்தியமில்லை.நாட்டின் நடப்புகளை கோட்டாபய அறிவதாக இல்லை என்று எங்களுக்குத் தெரியும்.நேற்றுக்கு முன்தைய தினம் வர்த்தமானியை வெளியிட்டனர்,இன்று சந்தையில் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.அரசாங்கத்துற்கு எந்த திட்டமிடலும் இல்லை.முகாமைத்துவம் சீராக இல்லை.வியத்மவைப் பெற்றவர்கள் இன்று சிஸ்டம் சேன்ச்சையும் மாற்றுவதாகவும் இல்லை.ஏலவே இருந்த சிஸ்டமும் இல்லை.பயணிக்கும் பாதை 

துருப்பிடித்த ஓர் சிஸ்டத்தில், மக்களிடையே செல்ல முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்ப்பட்டுள்ளது. பொது சேவை செயலற்றதாகிவிட்டது மற்றும் மக்கள் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய பொறுப்பை வழங்கியுள்ளனர்.ஆனால் அரசாங்கம் மக்களிடம் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. (Siyane News)


විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by SJB - Api on Friday, July 30, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.