ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கூட்டுக்கட்சிகளுடன் ஒன்றிணைந்து 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்று வெற்றியடைந்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது.

இத் தருணத்தில் அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டு முன்னோக்கி செல்லும்போது அரசாங்கத்தின் செயல்கள் பலராலும் போற்றப்பட்டுள்ளது

அதே வேளை அதற்கு எதிராக கல்லடியும், சொல்லடியும் விழுந்துக்கொண்டே இருக்கின்றது.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாபதி தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை பலப்படுத்த வேண்டுமாயின், பொது தேர்தலில் உறுதியான ஆட்சியொன்றை உருவாக்க அதிகாரத்தை தருமாறு பொதுமக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்று கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தினை வலுப்படுத்த மக்களிடம் இருந்து ஆதரவை கேட்டுக்கொண்டனர். இதற்கிணங்க பொது மக்கள் 3/2 பெரும்பான்மையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்கினர்.

சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தின் இலக்கை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கும் போதே, சற்றும் எதிர்பாராத விதமாக கொவிட் தொற்று அசாதாரண நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கொவிட் தொற்று நிலையுடனேயே சௌபாக்கிய தொலைநோக்கி திட்டத்தின் இலக்கை நோக்கி அரசாங்கம் பயணிக்கின்றது. இந்த கொவிட் வைரஸ் தெற்றானது நமது நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் அதிக சிக்கல்கள் ஏற்பட வழிவகுத்துள்ளது.

மேலும் அனைத்து உலக நாடுகளிலும் பொருட்கள் சேவை உற்பத்திகள், விநியோகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளுமே பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளிலும் இந்த கொவிட் வைரஸ் பரவல் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இதனால் நம்மை போன்று வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு, இந்த பொருளாதார பின்னடைவானது சிறியதொரு விடயமல்ல. எவ்வாறாயினும், இந்த அனைத்து சவால்களையும் எதிர்க்கொண்டு சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் நம் நாடு உள்ளது.

gcnmygiphkஇந்நிலையில், இன்றைய அரசாங்கம் ஆட்சி அமைத்து ஒரு வருடகாலம் நிறைவுபெறும் இத்தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு தங்களது ஆசிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோமென சர்வ மதத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக கொடிய வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளன. எனவே நாங்களும் அதனை பாராட்டாமல் இருக்க முடியாது. தொடர்ந்தும் இதேபோன்று மக்கள் நலன் கருதி மக்களுக்காக இந்த அரசாங்கம் செயற்படும் என்ற நம்பிக்கையில் அரசியல் தலைமைகளுக்கு எங்களது மும்மணிகளின் ஆசிகளை கூறி  நல்லாசிஅளிப்பதாக பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளர்.

இதேவேளை கொவிட் அசாதாரண நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில், முழு நாட்டுக்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டன, வைரஸ் தொற்று பதிவான பிரதேசங்கள் முடக்கப்பட்டதுடன், தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பபடுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. அத்தோடு கொவிட் - 19 தொற்று பரவலை தவிர்ப்பதற்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை உதாசினம் செய்பவர்களுக்கும், கவனயீனமாக நடந்துக்கொள்பவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கொவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கு நிவாரண கொடுப்பனவுகளும், உணவு பொதிகளும் வழங்கப்பட்டதோடு ஏனைய துறையினருக்கும் பல்வேறு நிவாரணங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்த நிலையில், வைத்தியசாலைகளின் சுகாதார வசதிகளும், சுகாதார கட்டமைப்புக்களும் மேலும் பலப்படுத்தப்பட்ட நிலையில், கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.668c0772 12586 P 7 mr 1

அத்துடன், நாட்டின் கல்வித்துறையில் சமகால அரசாங்கம் இரண்டாம் நிலை கல்வித் துறையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 2020 - 2025 காலப் பகுதியில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன. இந்நிதியில் 195 மில்லியன் அமெரிக்க டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்றது. இலங்கை அரசின் எஞ்சிய நிதிப்பங்களிப்புடன் இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் வருமானம் அதிகரிப்பது மாத்திரமின்றி, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2025 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் பாடத் திட்டம், கற்பித்தல் முறைமை, மதிப்பிடுதல் முறைமை ஆகியவற்றில் ஒருங்கிணைந்த சீர்திருத்தங்களை உருவாக்குவதன் மூலம், இரண்டாம் நிலைக் கல்வியின் வளர்ச்சியை ஏற்படுத்துவதனூடாக கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இதற்கு ஏற்றவகையில் ஆசிரியர்களை தயார்படுத்தும் பொருட்டு, புதிய பயிற்சி முறைமையின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல் மற்றும் கீழ் மட்டத்தில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் கற்றலை ஊக்குவித்தல், மேம்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக வளங்களை ஒதுக்குதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2020.12.01 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இத்திட்டத்தை தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், தற்போது இத்திட்டத்தை அமுல்படுத்துவற்கான சலக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டின் தொழில் சந்தை வாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் கல்விமுறையை சீர்செய்து இரண்டாம் நிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப மற்றும் வர்த்தகத் துறையை மேம்படுத்தல், மத்திய மற்றும் மாகாணப் பாடசாலைகள் புதிய சீர்திருத்தத்தை அடைந்து கொள்வதற்கான சக்தியை உருவாக்கல், இதனை வழிநடத்தும் முகாமைத்துவத்தின் கொள்ளளவை விருத்தி செய்தல் ஆகிய பெறுபேறுகளை அடைந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் சில...

மீள் ஏற்றுமதி கையாளல் திறனை இரட்டிப்பாக்குவதற்கு கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல்.

 கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னிலைப்படுத்தி இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளல்.

 ஐக்கிய கொள்கலன் முனையத்தில் களஞ்சிய வசதிகளை நிர்மாணித்தல்.

 அரச மற்றும் தனியார் கூட்டுரிமையின் பங்களிப்புடன் (PPP) மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

 பிராந்திய மற்றும் தேசிய பொருளாதார தேவைப்பாடுகளுக்கு ஏற்ப காலி, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல்.

 யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையே பாதுகாப்பாக பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்காக சறுக்குவழி (Slipway) மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை நிர்மாணித்து நிறைவு செய்தல் மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகம் சார்ந்துள்ள சறுக்கு வழியை (Slipway) நிர்மாணித்தல் திட்டமிடுதல்.

 கப்பற் பணியினர் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டையொன்றினை (SID) வடிவமைத்தல்.

 கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு (Bunkering) எண்ணெய்த் தாங்கிவசதிகளை மேம்படுத்தல் வ/ப ஜயா கண்டேனர் டேர்மினல் கம்பனி 3200
மெற்றிக் தொன் கொள்ளளவுடைய எண்ணெய்த் தாங்கியை நிர்மாணித்தல்.

 இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்காக (CSC) கொள்வனவு செய்த இரண்டு கப்பல்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் வங்கிக் கடனை மீளசெலுத்துவதற்கு திட்டமிடுதல்.

 காலிமுகத்திடலை பொதுமக்கள் விரும்பக்கூடிய சூழலாக மாற்றி செயற்படுத்தும் காலிமுகத்திடல் பசுமைச் சூழல் திட்டம்.

 வணிக கப்பற் பணியினருக்கான பயிற்சித் திட்டம்.

 கொழும்பு வடக்கு துறைமுக அபிவிருத்தித் திட்டம் - சாத்திய வளஆய்வு மேற்கொள்ளல்.

 ஜயகொள்கலன் முனையத்தை மேம்படுத்தல்.

 புளுமெண்டல் பிரதேசத்தில் உத்தேசிக்கப்பட்ட துறைமுகம் சார்ந்த சேவைகள் வழங்கல் பிரிவை அபிவிருத்தி செய்தல், திட்டமிடல்.

 கொழும்பு துறைமுகத்தில் தெற்கு ஆசிய சேவைகள் வழங்கும் நிலையமொன்றைத் திட்டமிடுதல்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.