அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு சமூகமளிக்குமாறு கூறி அரசாங்கம் புதிய சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதால் இது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக் கொண்ட தாய்மார்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என்றும், இந் நிலையில் அவர்களை சேவைக்கு  அழைத்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு தீவிரமான மட்டத்தில் உள்ளது என்றும் இவற்றினால் ஏற்ப்படும் இறப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.