வத்துப்பிடிவலை ஆதார வைத்தியசாலையில் கொவிட்
தொற்றாளர்களுக்கு தேவையான 3000 லீட்டர் திரவ ஒட்சிசன் தாங்கிக்கு தேவையான 9 மில்லியன் ரூபாய் பணமும் திரட்டப்பட்டுள்ளது.

வத்துப்பிடிவலை ஆதார வைத்தியசாலை சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சிராஜ் அவர்கள் கஹட்டோவிட்ட அல் ஹிமா அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் நூருள்ளாஹ் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளையடுத்து உடனடியாக அதற்கு தேவையான நிதியை பெற்று கொடுக்கும் முகமாக குவைத்தில் உள்ள இஸ்லாமிக் கெயார் ஸொஸய்ட்டி இன் கவனத்துக்கு இதை  கொண்டு வந்துள்ளார்.

இந்த அவசர தேவையை கவனத்தில் கொண்டு இதற்கு தேவையான முழுமையான பணத்தொகையையும் குறித்த வைத்தியசாலையின் கணக்கிலக்கத்துக்கு குவைத் நாட்டின் குறித்த சமூக சேவை அமைப்பினர் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை அல் ஹாஜ் நூருள்ளாஹ் அவர்கள் வைத்தியசாலை அதிகாரி வைத்தியர் சிராஜ் அவர்களிடம் கையளிப்பதை படத்தில் காணலாம். 

நன்றி : Kahatowita News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.