நாளை முதல் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும், நுகர்வோர் அதிகார சபையின் தலைவரும், லிற்றோ மற்றும் லாவ் காஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது குறித்த நிறுவனங்கள் வசமுள்ள காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அவதானித்தனர். இதன்படி எதிர்காலத்தில் தட்டுப்பாடின்றி எரிவாவை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை லாவ் காஸ் நிறுவனம் தற்போது புதிய விலைக்கமைவாக எரிவுவை சந்தைக்கு விநியோகிக்கிறது. எனினும், லிற்றோ நிறுவனம் விலையில் மாற்றம் செய்யாது அதனை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.