விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள வர்த்தமானி அறிவிப்பை அமைச்சரவை ஊடாக மாற்றியமைத்து ஒரு நிறுவனம் மாத்திரம் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதோடு யாருடைய தேவையின் நிமித்தம் மீளவும் தனது உற்ற நண்பர்களை போஷிப்பதற்கான முயற்சியில் மீண்டும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்ற பிரச்சிணை எமக்குள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்யும் 29 நிறுவனங்களில் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ரூ.10 பில்லியன் மதிப்புள்ள இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்ய யாருடைய தேவையின் நிமித்தம் என்றும் அவர் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த மனுஷ நாணயக்கார,

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு இழக்கப்பட்டுள்ளது. மனித உயிர்கள் வீணாக பலியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் மக்களின் உணவு பாதுகாப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது.

உரம் தொடர்பான தன்னிச்சையான முடிவின் காரணமாக உணவுப் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இன்று, வட மத்திய மாகாணம்,அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சோளப்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அடுத்த பருவச் செய்கை குறித்து சிந்திக்கிறார்கள்.  தேயிலை பயிர்ச்செய்கை விவசாயி தொடர்ந்து தேயிலை பயிரிடுவதா என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  நாளை நெல் பயிரிடுவதா என்று நெல் விவசாயிகள் மீண்டும் யோசிக்கிறார்.

வணிக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சோளச் செய்கை விவசாயிகள் கடுமையான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சோளத் தண்டுகள் கால்நடைகளின் தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.  அடுத்த ஆண்டுக்குள்,சோளத்தண்டுகள் கால்நடைகளுக்கு இழக்கப்பட்டு பால் உற்பத்தி பாதிக்கப்படலாம். அப்போது இந்த நாட்டில் பால் உற்பத்தியும் குறைந்து கடுமையான பிரச்சனை எழும்.

விவசாய ஏற்றுமதியில் ஆண்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. இந்த வருவாயையும் இழக்கவே அரசாங்கம் தயாராகி வருகிறது.

அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து அரிசியைக் கொண்டு வந்தது. கன உலோகக்கலவை இருப்பதால் மக்கள் நோய்வாய்ப்படுவதால் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டன.  பாகிஸ்தானிலிருந்து இப்படித்தான் காபனிக் அரிசி தான் இறக்குமதி செய்யப்பட்டதா?  அரிசியில் கன உலோகக்கலவை இல்லையா?  சிறுநீரக நோயாளிகளாக மக்கள் மாறலாம் என்று அரசாங்கம் மக்களின் இதயங்களுடன் பேசி, இன்று அவர்கள் பிரச்சனையில் உள்ளனர்.

மரக்கறி விவசாயிகள் நாளைக்குள் காய்கறிகளைப் பயிர் செய்வதாக இல்லாவிட்டால், ​​குறைந்து வரும் மரக்கறி உற்பத்தியில் உள்ள இடைவெளியை எப்படி நிரப்ப முடியும்? அந்த மரக்கறிகளில் சிலவற்றை நீங்கள் இறக்குமதி செய்யப்போகிறீர்களா? காபனிக் மரக்கறிகளையா இறக்குமதி செய்யப்போகிறீர்கள்? அவ்வாறு காபனிக் மரக்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதா?

டொலர் பற்றாக்குறையால் எரிபொருள் கொள்வனவிற்கு பங்களாதேஷிடம் கடன் பெரும் அரசாங்கத்தால் அரிசி மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் டொலர் இருக்கிறதா?  அப்படி நடந்தால் இந்த நாட்டில் ஒரு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்.

இவை சீனாவிலிருந்து இலவச கிடைக்கப்பெருமா என்று கூட எங்களுக்குத் தெரியாது. அது நடந்தால் எங்கள் நாட்டை கைப்பற்றுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட உணவு காபனிக் கலவை கொண்டதா அல்லது இரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதா என்பதை பார்க்காத அரசாங்கம், இப்போது முதலைக் கண்ணீர் வடித்து,காபனிக் விவசாயம் பற்றிப் பேசுவது டொலர் பஞ்சத்தால் மட்டுமேயன்றி வேறு ஒன்றும் இல்லை.

பெரும் போக பருவத்தில் விவசாயிகளுக்கு பயிர்செய்கைக்கு இயற்கை உரம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் என்ன?  பெரும்போக பருவத்தில் 1.4 மில்லியன் ஏக்கர்களில் நெற்செய்கை செய்யப்படுகிறது.  இதற்கு தேவையான இயற்கை உரத்தை அரசாங்கத்தால் தயாரிக்க முடியுமா?  அல்லது இறக்குமதி செய்யவா தயாராகிறது.

காபனிக் சேதன உரங்கள் இப்போது எல்லா இடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  ஆனால் அவற்றில் தேவையான அளவு நைட்ரஜன் இல்லை. தேவையான அளவில் நைட்ரஜன் கலவை உள்ளடக்கம் இல்லை என்றால்  உர உற்பத்தியாளருக்கு என்ன நடக்கும்?  அல்லது திரவ உரங்கள் என்று கூறி மக்களை மீண்டும் முட்டாளாக்கவா அரசாங்கம் தயாராகிறது?

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன பூச்சிக்கொல்லிகளில் 60% களைக்கொல்லிகள் ஆகும்.  நாம் இயற்கை விவசாயத்திற்குச் சென்றால், களைக்கொல்லிகளுக்கு மாற்றீடு கண்டுபிடிக்க வேண்டும். நெல் பயிர்ச்செய்கை,சோளப்பயிர் செய்கை மற்றும் தேயிலை உற்பத்திகளுக்கு களைக்கொல்லி இல்லாமல் மேற்கொள்ள முடியாது.  களைக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளுக்கான காபனிக் தீர்வை அரசாங்கம் கண்டறிந்துள்ளதா?

இந்த பருவத்தில் விவசாயி அனாதையாகி விட்டார்.  அடுத்த பருவத்திலும் விவசாயி அனாதையாக இருந்தால், உணவு பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நெருக்கடி ஏற்படும்.

வர்த்தமானியைத் திரும்பப் பெறுவதன் மூலம் அரசாங்கம் மீண்டும் ஒரு நெருங்கிய நண்பரை போஷிக்க முயல்கிறது.  எக்காரணம் கொண்டும் இரசாயன உரங்கள் மீதான தடை நீக்கப்படாது என்றார்கள்.  ஒரு துளி இரசாயன உரமும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதியின் ஊடகப்  தொடர்பாளர்கள் மீண்டும் மீண்டும் கூறினர்.  அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் கூறினர்.

இருப்பினும், 114 இரசாயன பூச்சிகளில் 35 வகையாவற்றை இறக்குமதி செய்ய கடந்த வாரம் அமைச்சரவையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்ததா?

ஆண்டுக்கு ரூ.12 பில்லியன் மதிப்புள்ள பூச்சிக்கொல்லிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதிலும் ஒரு நிறுவனமே 10 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்கிறது.  இலங்கையில் உள்ள 29 நிறுவனங்களில் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ஏன் இரசாயன பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது?

பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  களைக்கொல்லிகளின் இறக்குமதிக்கு அனுமதி இல்லை. இந்த ஆவணங்களை நாங்கள் ஊடகங்களுக்கு வழங்குகிறோம்.

உலகின் முதல் காபனிக் நாடு இலங்கை என்று ஜனாதிபதி கூறினார். மற்ற வர்த்தமானிகளைப் போல் சத்தம் போடாமல் இந்த வர்த்தமானியையும் திருப்பி விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கிறீர்களா?  அல்லது உலகை ஏமாற்றவா?  பாம்புப்  காட்டுவது போல,முட்டிகளை ஆற்றில் எறிவது போல, மக்களை ஏமாற்றியது போன்று இந்த விடயத்திலும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்களா? உலகின் ஒரே கரிம நாடு இலங்கை என்று கூற முயன்ற ஜனாதிபதி அமைச்சரவை மூலம் வர்த்தமானியை மாற்றியமைக்க முயற்சிக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறேன்.

19 நிறுவனங்கள் இருக்கும் இடத்தில், ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.  அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இது மேற்கொள்ளப்படுகிறதா? அல்லது இராஜாங்க அமைச்சரின் உத்தரவின் பேரில் இது மேற்கொள்ளப்படுகிறதா?  இந்த தொழிலை ஒரு தனிநபருக்கு கொடுக்க முயற்சிப்பது யார்?

அந்த சீனி வியாபாரம் போல, ஆன்டிஜென் ஏகபோகத்தை உருவாக்கியது போல, ஹோட்டல்களை தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றியது போல,விவசாயிகளை கஷ்டத்தில் ஆழ்த்தி உற்ற நண்பர்களை போஷிப்பதற்காக நடத்தும் இறக்குமதியாக மாற்றப் போகிறார்களா?

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.