பாராலிம்பிக் போட்டிகளில் உலக சாதனை படைத்த இலங்கை வீரர்!

Rihmy Hakeem
By -
0

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தினேஸுடன் வீடியோ தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)