தற்போது கொவிட் நோய் இலங்கையில் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதன் நான்காவது அலை வீசிக் கொண்டிருக்கிறது. வைத்தியசாலைகள் நோயாளிகளாலும் பிரேதங்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் தான் மிக அதிகமாக மரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தற்காப்பு முயற்சிகளில் கட்டாயமாக ஈடுபட வேண்டும்.

அதன் முதல் கட்டம் நாம் எவருடைய வீடுகளுக்கும் போகக்கூடாது. அவை மிக நெருங்கிய உறவினர்களது வீடுகளாக இருந்தாலும் கூட. மேலும்  எமது வீட்டுக்கு மற்றவர்களை அழைக்கவும் கூடாது.

மிக நிர்ப்பந்தமான நிலையில் பிறரது வீடுகளுக்குச் செல்ல நேரிட்டாலும் வெளியிலிருந்து கதைத்து விட்டு மிக அவசரமாக திரும்பி விட வேண்டும்.

ஏனென்றால் யாருடைய உடம்பில்  இந்தக் கிருமி தொற்றி இருக்கிறது என்று எவருக்குமே தெரியாது.

வீடுகளது கதவுகளில் அல்லது 'கேட்'களில் அறிவித்தல் ஒன்றை தொங்கவிட்டால் கூட அது பிழையாகமாட்டாது.

கொரோனா காலத்தில் பிறருடைய வீடுகளுக்கு போகாமல் இருக்க வேண்டும் என்றும் அப்போது கொவிட் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என்றும் கூறுகின்ற பொழுது எவரும் பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

நெருங்கிய உறவினர்களோடும் அயல் வீட்டாரோடும் நண்பர்களோடும் தொலைபேசி மூலம் உரையாடுவதற்கான வாய்ப்பு இக்காலத்தில் தாராளமாக இருக்கிறது.

எனவே அந்த ஊடகத்தைப் பயன்படுத்தி எமது உறவுகளை தொடர்ந்தும் பாதுகாத்து வருவோம். தேவைகளை கேட்டறிவோம்; சுகதுக்கங்களை விசாரித்துக் கொள்வோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.