*பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று தன் வாகனத்தில் வெள்ளை மாளிகைக்கு சென்று கொண்டிருந்த போது முன் இருக்கையில் அவரின் மனைவி ஹிலாரி கிளின்டன் அமர்ந்திருந்தாராம்..*

*பில் கிளின்டன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாராம்... வாகனம் திடீரென நின்று விட்டது காரணம் பெட்ரோல் இல்லை..*

*உடனே அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வாகனம் கொண்டு செல்லப்பட்டது.  ஒருவர் பெட்ரோல் போடுகிறார்.  பெட்ரோல் போட்டு முடித்தவுடன் அந்தப் பெட்ரோல் போட்ட ஊழியர் காரின் கண்ணாடியைத்தட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹிலாரி கிளிண்டனிடம் ஹிலாரி How are you என்று கேட்க பதிலுக்கு ஹிலாரியும் I'm fine என்று சொன்னாராம்!  கண்ணாடி ஏற்றப்பட்டு வாகனம் புறப்பட்டது.*

*பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பில்கிளின்டன் ஆச்சரியத்துடன் தன் மனைவி ஹிலாரியை பார்த்து கேட்டாராம் ஹிலாரி நீ ஒரு அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் வெள்ளை மாளிகையில் குடியேறப் போகும் அதிர்ஷ்டசாலி.. இந்த சாதாரண  பெட்ரோல் பங்க் ஊழியரை உனக்கு எப்படித் தெரியும் என்றாராம்*..  

*அதற்கு ஹிலாரி கிளின்டன் சொன்னாராம் ஓ... அதுவா அவன் என்னுடைய கிளாஸ்மேட் அவன் பெயர் அலெக்சாண்டர்.  அவன்  நல்ல வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவன். பள்ளியில் நன்றாகப்படிப்பவன்.  அது மட்டுமல்ல என்னை அதிகமாக நேசிப்பவன். என்ன செய்ய காலத்தின் சூழ்நிலை அவன் பெட்ரோல் பங்க்கில்  வேலை செய்கிறான்... என்றாராம்..*

*வாகனம் போய்க் கொண்டே இருக்கிறது!* *பில்கிளின்டன் ஹிலாரியிடம் கிண்டலாக, ஒருவேளை உன்னை அதிகமாக நேசித்த  அவனை நீ நேசித்து திருமணம் செய்து இருந்தால் இன்றைக்கு பெட்ரோல் பங்க் ஊழியரின் மனைவியாக இருந்திருப்பாய்,  அப்படித் தானே ஹிலாரி என்றாராம்...*

*அதற்கு ஹிலாரி சொன்னாராம், "அப்படி அல்ல மிஸ்டர் பில் கிளின்டன்! அந்த அலெக்சாண்டர் அமெரிக்க அதிபராக இருந்திருப்பான்!  நீர் வேறு எங்கேயாவது ஊழியராக இருந்திருப்பீர்" என்றாராம்!*

*பல நேரங்களில் மனைவியின் திறமைகளை சாதாரணமாக எடுத்து கொள்கிறோம்! ஆனால் நாம் கெத்தோடும் சத்தோடும் வாழ்வது நம் துணையினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது!* ‌‌  ‌                             ‌                      
*கழுத்தில்  "தாலி" ஏறும் வரை யாரென்று தெரியாமலேயே தன்னையே ஒப்படைத்து அவருடன் வாழ்க்கைப் பயணங்களை தொடங்கும் பெண்ணை விடவா "தன்னம்பிக்கை"க்கு வேறு உதாரணம் இருந்து விடப் போகிறது??..*
                            ‌‌ ‌ 
*இந்தப் பதிவைப்  படித்ததும் நமது  முகத்தில் ஒரு "புன்னகை பூக்கும் முக்கியமாக பெண்கள் முகத்தை பாருங்கள்!* 

*அதற்காகத்தான் இந்தப் பதிவு!*

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.