பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான பொட்ட நௌபர் என்று அழைக்கப்படும் மொஹமட் நியாஸ் நௌபர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரக நோய்க்கான பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவர், மேலதிக சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று  சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் இன்று உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2004 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை செய்யப்பட்டதற்காக பொட்ட நௌபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.