மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக்கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக 'தொழில் வழிகாட்டல் வாரத்தை' ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை (தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை ( Online ) முறையினூடாகவும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சித்திரம், கவிதைஇ கட்டுரை, பேச்சு, வினாடிவினா போட்டிகளை நடத்த மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
ஆகஸ்ட் 23ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 12ம் திகதி வரையில் Online   ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு மாவட்ட செயலக மற்றும் தத்தமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும். (Siyane News)

Link - https://www.dome.gov.lk/web/index.php/ta/contact-us-ta/contact-details-ta#%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

அரசாங்க தகவல் திணைக்களம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.