இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

பண்டாரவளை அரசினர் மருத்துவமனையிலேயே, மேற்படி மரணம் பதிவாகி உள்ளது.

பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பானை என்ற ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய எய்ச். எம். குணதாச என்ற ஆதிவாசியே  உயிரிழந்தவராவார்.

இவ் ஆதிவாசி நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் அவஸ்தைபட்டு, சிகிச்சை பெற்று வந்தவராவார். 

இவர் நோய் காரணமாக, பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் இவர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில், இவர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

ஆதிவாசிகளின் முதல் மரணம் இதுவென பதிவாகியுள்ளது.

தம்பானை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரியலாகே வன்னியலத்தோ, தமது கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசியொருவர், கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்திருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளார். 

செல்வா


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.