பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

அதற்கான நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து இன்று (26) பிரமித்த பண்டார தென்னகோன் எம்.பிக்கு வழங்கிவைக்கப்பட்டது.

2021 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ண ஆகியோர் உடனிருந்தனர். 

Source

இதுவரை காலமும் மேற்படி பதவியானது பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவிடம் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.