நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

இன்றைய தினம் (14) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

53,000 பயிற்சி பட்டதாரிகளில் 18,000 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த விடயங்களை விரைவுபடுத்தி எஞ்சிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.