எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்றிரவு (23) வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கம்பஹா கல்வி வலயத்திலுள்ள திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் 07 மாணவர்கள் 09 பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளனர்.

இது தவிர, கம்பஹா கல்வி வலயத்திலுள்ள கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இருவரும் மற்றும் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இருவரும் 09 பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளனர்.

மேலும் மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள கல் எளிய அலிகார் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) இல் ஒருவரும் மற்றும் மினுவாங்கொடை, கல்லொழுவ அல் அமான் மகா வித்தியாலயத்தில் ஒருவரும் 09 A சித்திகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவர்களை தவிர பல்வேறு பாடசாலைகளிலும் உள்ள பல மாணவர்கள் 8A, 7A, 6A, 5A, 4A, 3A உட்பட சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்து உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 

அனைவருக்கும் எம்முடைய Siyane News இணையத்தளம் மற்றும் Siyane Media Circle Pvt Ltd நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சித்தியடையாத மாணவர்கள் அடுத்த முறை மீண்டும் முயற்சி செய்து பரீட்சை எழுதும் வாய்ப்பு காணப்படுகிறது. அல்லது அரசாங்கத்தால் நடாத்தப்படும் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தொழில் பயிற்சி நிறுவனங்களில் பல்வேறு கற்கை நெறிகள் காணப்படுகின்றன. அவற்றில் உங்களது திறமைக்கு ஏற்ப ஒன்றை தெரிவு செய்து அதனை பூர்த்தி செய்து பயிற்சியும் பெற்று அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

சரியான ஆலோசனைகளைப் பெற்று சரியான முடிவுகளை எடுங்கள். 

(செய்தி ஆசிரியர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.