கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் (BMC) இறக்குமதி செய்யப்படும் சுகாதாரப் பொருட்கள், தரை மற்றும் சுவர் நிர்மாணத்திற்கான சுவர் ஓடு (டைல்)  விற்பனைக் கூடம் கொழும்பில் சிறீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் காட்சியறையில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

சுகாதாரப் பொருட்கள், தரை மற்றும் சுவர் நிர்மாணத்திற்கான சுவர் ஓடு போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படுவது மட்டுமல்லாது அவைகளுக்கான விலை உயர்வு காரணமாக அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இதனைத் தொடர்ந்து இந்த சூழ்நிலையிலிருந்து மாற்றம் ஏற்படுவதற்காக வேண்டி அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினாலும் உயர் ரக சுகாதாரப் பொருட்களும் தரை மற்றும் சுவர் நிர்மாணத்திற்கான சுவர் ஓடுகளும் இறக்குமதி செய்வதற்காக வேண்டி உயர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்கள்.

அதே போன்று கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் மூலமாக இந்த நாட்டிற்கு தற்போது இறக்குமதி செய்யப்படும் சுகாதாரப் பொருட்கள், தரை மற்றும் சுவர் நிர்மாணத்திற்கான சுவர் ஓடுகள் (டைல்) என்பன தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்தும் இதே நிறுவனம் இறக்குமதி செய்யத் தயாராய் இருக்கிறது. அதே போன்று பாவனையாளர்களுக்கு  சலுகை விலையில் இந்தப் பொருட்களை விற்பனை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். எனவே பாவனையாளர்கள் இதனை சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நிகழ்வில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர்  (நிர்மாணத் துறை) எஸ்.எம்.ஏ. நெலுகொல்ல, கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மகேந்த்ர விஜேசேகர, அதன் பொது முகாமையாளர் திலும் ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2021.09.17


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.