முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார்ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்கலகட அத்தே ஞானசார தேரருக்குஎதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம்பாராளுமன்றஉறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக்,அலிசப்ரி ரஹீம்,சட்டத்தரணி முஸாரப் முதுநபின்,இசாக் ரஹ்மான் ஆகியோர்பொலிஸ்தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வுபிரிவு பணிப்பாளர் ஆகியோரிடம் முறைப்பாடொன்றைபதிவு செய்துள்ளனர்.

ஞானசார தேரர் அண்மையில்சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்தஈஸ்டர் குண்டு தாக்குதல்நடத்திய குழு மற்றும் அவர்களை அந்நடவடிக்கையில்ஈடுபட தூண்டியவிடயம்சில அல்குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள்வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்குமுழுக்காரணம் என்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது இதனால்முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர்.

எனவே இந்தவிடயத்தை செய்த ஞானசார தேரருக்குஎதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கில் குறிப்பாகமக்களை குழப்பி மதநிந்தனைசெய்துள்ள இந்தகுற்றச் செயலுக்கு ICCPR சட்டத்தின்கீழ்ஞானசாரவை கைதுசெய்து தண்டிக்கவேண்டும் என்று பாராளுமன்றஉறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும்குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது விடயம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

கடந்தகாலங்களில்ஞானசார தேரர் சமூகத்திற்குஎதிராகசெயற்பட்டதற்குஅமைய சட்டரீதியாக அணுகி அவர்தண்டிக்கப்பட்டார். அதேபோன்று இவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் நாட்டின் முக்கிய உலமாக்கள்சட்டத்துறை விற்பன்னர்கள்சமூக நலவாதிகள்ஆகியோருடன் கலந்துரையாடினோம். அவர்கள்கூறியஆலோசனை இது சம்பந்தமாகபாராளுமன்றத்தில் கடுமையான முறையில் விவாதிக்கும்போது ஞானசாரருக்கு சார்பாக சிங்களப் பாராளுமன்றஉறுப்பினர்கள்இதை பாரிய சிங்கள முஸ்லிம்குழப்பத்திற்குகொண்டுபோக முடியும். எனவே இவ்வாறான சூழ்நிலையைவிட இறைவனுக்கு செய்த நிந்தனையையும் முஸ்லிம்மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படும் இந்த ஞானசாரவை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனைவழங்க நடவடிக்கை எடுப்பதுநல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அந்தஅடிப்படையிலேயேமிக நிதானமாகவும் சமூக பொறுப்புடனும் இவருக்கு நடவடிக்கை எடுக்க பொலீசாரைஅனுகியுள்ளோம்.

இது விடயமாக மக்கள்பாதுகாப்புஅமைச்சர்சரத் வீரசேகரவைசந்தித்துபேசியுள்ளதுடன்இவருக்கு எதிராக கடுமையானநடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான துரித நடவடிக்கை எடுக்க பொலிசாரை பணிக்கு மாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் நாடு திரும்பியவுடன்ஜனாதிபதியை சந்தித்துஞானசார தேரர் இந்த நாட்டில்சமூகங்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதை சுட்டிக்காட்டி ஞானசாரருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும்தீர்மானித்துள்ளோம்.

குறிப்பாக முஸ்லிம்சமூகம்சம்பந்தமாகவும் முஸ்லிம்சமூகத்துக்குஎதிராக யார்செயல்ப்பட்டாலும் எதற்கும்அஞ்சாது இதயசுத்தியுடன்சமூகம் பாதுகாப்பாக அச்சமின்றிவாழக்கூடிய சூழலை இந்நாட்டில் உருவாக்க முயற்சிப்போம்என்பதை எமதுசமூகம்உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்மேலும் தெரிவித்தார்.

-நூருள்ஹுதா உமர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.