நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கை நாட்டவர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
போலீஸ் கண்காணிப்பில் இருந்த அந்த இலங்கை நாட்டவர் செய்தது தீவிரவாத தாக்குதல் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
அந்த நபரின் அடையாளத்தை வெளியிட முடியாது என்று குறிப்பிட்ட ஆர்டென், இஸ்லாமிக் ஸ்டேட் (IS) தீவிரவாதக் குழுவினால் ஊக்கம் பெற்று அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
அந்த நபர் தாக்குதலில் ஈடுபட்ட 60 விநாடிகளில் அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
"இன்று நிகழ்ந்தது வெறுக்கத்தக்கது. இது வெறுப்புணர்வு நிறைந்த செயல், தவறான செயல்," என்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.
"இந்த செயல் எந்த நம்பிக்கையின் சார்பாகவும் மேற்கொள்ளப்படவில்லை. தனிப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்டது." என்றும் அவர் குறிப்பிட்டார்
BBC