உயர்தரப் பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு!

Rihmy Hakeem
By -
0

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான மேலதிக விபரங்களை www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)