இன்றைய (03) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள்.

கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பெறப்பட்ட தரவுகளின்படி இது 15% ஆல் அதிகரித்துள்ளது.  இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த பாராளுமன்றம் மூலம் கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறினோம்.  எதிர்க்கட்சியாக நாங்கள் தேவையான சந்தர்ப்பத்தில் நாட்டை முடக்குமாறும், தடுப்பூசியை முறையாக மேற்கொள்ளுமாறும்  கூறினோம். ஜனவரியில் இருந்து கிராம அளவில் மக்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டோம்.  அனுராதபுரம் மற்றும் வடக்கு கிழக்கிலும் இதே நிலை தான்.கிட்டத்தட்ட 100,000 பேருக்கு  கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாவது டொஸ்ஸை இழந்துள்ளனர்.  தடுப்பூசி சரியாக மேற்கொள்ளப்படவில்லை.  சமீபத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு அமைச்சரவை அமைச்சர் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவதைப் பார்த்தோம், தடுப்பூசி அரசியல்வாதிகளின் தலைமையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது, ​​வெலிகம பொலிஸ் ஓஐசி தடுப்பூசிக்கு வந்த மக்களை விரட்டியடிப்பதைக் கண்டோம்.  மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கத்திடம் சரியான முறைமை ஒன்று இல்லை.  வெலிகம மக்கள் பொலிஸாரிடமிருந்து அடி வாங்கி ஓடும் போது ஹம்பந்தோட்டையில் அமைச்சர் ஒருவர் மூலம் 18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.தடுப்பூசியை மாட்டங்களுடன் மட்டுப்படுத்தாமல் சகலருக்கும் வழங்குங்கள்.தடுப்பூசியை அரசியலாக்காமல் மேற்கொள்ளுங்கள் அரசாங்கத்தை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆகஸ்ட் மாதம் 15% ஆல் தொற்றாலர்கள் அதிகரித்துள்ளனர்.பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.அந்த குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்மையில் பெரும்போக பருவம் வருகிறது, விவசாயிகளுக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. முன்பு அவர்கள் நெல் பயிரிடுவதற்கு முன்பு பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சிநாசினிகளைப்  பயன்படுத்தினார்கள் ஆனால் இப்போது அவர்களுக்கு தேவையான இரசாயனங்களை எங்கும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய அநீதியாகும்.உரங்கள் இல்லாத்தால் வரும் பெரும் பருவத்தில் அறுவடை 46% ஆல் குறைவடையும்.  அரிசி மற்றும் சீனிக்கு  வரிசைகளை அமைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.  இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது.  இதற்கு சீரான நிர்வாகக் குறைபாடு, சரியான கொள்கைகள் இல்லாதது, சர்வதேச சமூகத்துடன் சரியான உறவு இல்லாதது, ஒட்டுமொத்த அரசாங்கம் எடுத்த தவறான முடிவுகள் என்பன காரணமாகும்.அரசாங்கம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது அதற்கான பிரதிபலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது.

பொருளாதார நிர்வாகத்தில் சரியான கொள்கையை வகுப்பதன் மூலம் இந்த நாட்டை காப்பாற்றுங்கள் என்று கூறுகிறோம்.

2015 இல் எங்கள் அரசாங்கம் நியமிக்கப்பட்ட நான்கரை ஆண்டுகளுக்குள் எங்களால் முடியும் என்பதை நிரூபித்தோம்.இருப்பினும், 2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பொய், ஏமாற்று மற்றும் மக்களை ஏமாற்றி ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதற்காக ஒரு மாநையை உருவாக்கியது.மக்களை மீண்டும் ஏமாற்ற வேண்டாம் என்று கூறுகிறோம்.முடியாவிட்டால் எங்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும், எங்களால் முடியும் என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு  மீண்டும் கோருகிறோம்.  எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். கொன்றவர்களை மன்னிக்க முடிந்தால், ரன்ஞன் ராமநாயக்கவிற்கு ஏன் மன்னிப்புக் கொடுக்க முடியாது. அவர் நேர்மையாகப் பேசி மக்களுக்காக முன் நின்ற அரசியல் தலைவர்.  அவர் ஐந்து சத காசுகளைக் கூட திருடவில்லை.  அவர் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது அதிகாரப்பூர்வ வாகனத்தைக் கூட பயன்படுத்தவில்லை.அவர் அதிகாரப்பூர்வ வீட்டைக் கூட பாவிக்கவில்லை.  ரஞ்சன் ராமநாயக்க ஒரு இராஜாங்கிமைச்சராக நேர்மையாக செயல்பட்ட ஒரு அரசியல் தலைவர்.  இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  இந்த நாட்டுக்கு அவர் தேவை. அவருக்காக ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள்.கொலையாளிகளை விடுவிக்க முடிந்தால் ஏன் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய முடியாது.

ஐக்கிய இளைஞர் சக்தியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக சீனி மோசடி குறித்து முறைப்பாடு செய்தோம். பெப்ரவரி மாதம் வாக்குமூல பதிவிற்காக அழைத்திருந்தனர்.உரிய தகவல்களை சமர்ப்பித்து உண்மைகளை முன்வைக்கும்படி கேட்டோம்.  இந்த வரிகளின் குறைப்பால் அரசாங்கம் பல பில்லியன்களை இழந்தது.தற்போது நாட்டில் தேவையான அளவு சீனி இருக்கிறது. வணிகர்களுக்கும் உற்ற நண்பர்களுக்கும் நிவாரணம் அளிப்பதயே அரசாங்கம் செய்து வந்தது,அவ்வாறு இல்லை என்றால் பதுக்கப்பட்ட களஞ்சியசாலைகளிலுள்ள சீனியை அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அதைச் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. நாங்கள் மீண்டும் அரசாங்கத்தை பணம்

கொடுத்து வாங்கச் சொல்லவில்லை.  சில மாதங்களுக்கு முன்பு ரூ.85 க்கு சீனி வழங்க வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கு பதிலாக அவர்கள் ரூ.120 க்கு கொடுக்க முயற்சி செய்கிறார்கள். தயவுசெய்து அதையும் விட குறைந்த விலைக்கு சீனியை கொடுங்கள்.பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியை கண்டுபிடித்து அரச உடமையாக்குங்கள் என்று தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.