(ரிஹ்மி ஹக்கீம்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் மீரிகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (15) மீரிகமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், மீரிகமை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட 149 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள மக்களுக்கு மிகவும் பலன்தரும் வகையில் நிதி ஒதுக்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த கிராம மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, மீரிகமை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், மீரிகமை பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

(Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.