பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் முன்னணிக் கடமைகளை நிறைவேற்றகின்ற தேசிய ஔதடங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள், சுகாதார பாதுகாப்பு தொடர்பிலான தீர்மானமிக்க காலப்பகுதியில் காணாமல் போனமை பாரதூரமான நிலைமையை உருவாக்குவதற்குக் காரணமாக அமையலாம் என எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பிய வண்ணம் தெரிவித்தார்.
தேசிய ஒளடங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்குரிய மிக முக்கியமான சுமார் 11 இலட்சம் தரவுக் கோவைகள் காணாமல் போனமை மற்றும் அதன் முழுப் பொறுப்பையும் ஒரு தனியார் நிறுவனத்தின் கணினி இயக்குநரின் கை தவறு எனத் தெரிவித்து அதனை நலினப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.