பூகொடை, யகம்பே பிரதேசத்தில் நித்திரைக்குச் சென்ற அக்கா (வயது 43) மற்றும் தம்பி (வயது 38) இருவரும் காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவரும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று நித்திரைக்கு சென்றிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று (03) காலை உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்ற போது அவ்விருவரும் கீழே விழுந்த நிலையில் உயிரற்று காணப்பட்டுள்ளதனையடுத்து, சுகாதார பிரிவிற்கு அவர் அறிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து சடலங்கள் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.