அழகியல் பாட பரீட்சை எழுதிய மாணவர்களை A/L இற்கு உள்வாங்குவது தொடர்பில் விஷேட சுற்றறிக்கை வெளியாகும்

Rihmy Hakeem
By -
0


 2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அழகியல் பாட பரீட்சைக்காக தோற்றிய மாணவர்கள் உயர் தர வகுப்பில் உள்வாங்குவதற்கு தேவையான ஆகக்குறைந்த தகுதிகளை உள்ளடக்கிய விசேட சுற்றிக்கையை வெளியிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று (24) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பாக தெரிவிக்கையில் , அழகியல் பாடநெறி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஏனைய பாடங்களில் இரண்டு திறமை சித்தி அடங்களாக 05 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் திறன் ஆற்றல் படி நிலை 01தொடக்கம் 04 வரையிருக்குமாயின் அழகியல் பாடநெறி பரீட்சை பெறுபேறு வெளிவரும் வரையில் இந்த மாணவர்களுக்கு உயர் தர வகுப்பில் பிரவேசிக்க முடியும் என்றார்.

இதற்கமைவாக அழகியல் பாடநெறிக்கான பெறுபேறு வெளியிடுவதில் நிலவும் தாமதத்தின் காரணமாக மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)