31.08.2021

மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ,

ஜனாதிபதி செயலகம்,

காலிமுகத்திடல்,

கொழும்பு 01,


மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பாக

எங்கள் அன்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனவரி 12, 2021 முதல் இன்று வரை 232 நாட்களாக சிறைத் தன்டனையை அனுபவித்து வருகிறார். ரஞ்சன் ராமநாயக்க ஒரு நேர்மையான மனிதராகவும், உண்மையைப் பேசும் மனிதராகவும் பரவலாகக் கருதப்படுகிறார். ஒரு கலைஞராக, ரஞ்சன் ராமநாயக்க பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான நடிகராக திகழ்வதோடு, அவர் மக்கள் சார்பான கலைஞராக பெரும் புகழ் பெற்றுள்ள அதேசமயம் மற்றும் பல சமயங்களில் அரசியல்வாதியாக அதிக வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமாவார்.

அவர் அரசியலில் அல்லது வேறு எந்த முறைகேடான நடவடிக்கைகளிலும் அல்லது ஊழலிலும் ஈடுபடவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அரசியல் கட்சிகள் வேறுபாடுகள் இன்றி மதத் தலைவர்கள், மூத்த கலைஞர்கள், சட்ட அறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அவரை விடுவிப்பதில் தலையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளதோடு, மேலும் இது போன்ற பல கோரிக்கைகள் உங்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து நான் பலமுறை உங்களுக்கு அறிவித்துள்ளதோடு, அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களிடமிருந்து நான் பெற்ற நேர்மறையான பதிலை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

மேற்கண்ட தரப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பாக என்னிடம் பலமுறை  கேட்டும் கோரிக்கைகளையும் விடுத்தவன்னமுள்ளதோடு, அத்தகைய கோரிக்கைகள் நேர்மறையானவை மற்றும் நியாயமானவை என்று நீங்களும் நம்புகிறீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அதன்படி, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு  ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பாக உங்கள் நேர்மறையான பதிலை விரைவாக எதிர்பார்க்கிறேன்.


நன்றி

சஜித் பிரேமதாச 

எதிர்க் கட்சித் தலைவர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.