இலங்கை மருத்துவ சங்கம் (எஸ்.எல்.எம்.ஏ) மற்றும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல் பாட்டு மையம் (NOCPCO) இணைந்து கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மைய உறுப்பினர்கள் , விஷேட வைத்திய நிபுணர்கள், சுகாதார நிர்வாகிகள், சிவில் மற்றும் இராணுவ வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மைய அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் (24) பிற்பகல் ராஜகிரிய கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் டாக்டர் அசேல குணவர்தன உடன் நடைப்பெற்ற கூட்டத்தில் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில் ஒரு வருடத்திற்கும் மேலாக அனைத்து மருத்துவ சகோதரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் நாட்டின் உண்மையான பிள்ளைகளாக அனைத்து இலங்கையர்களின் விவரிக்க முடியாத தியாகங்கள் காரணமாக இறப்பு விகிதம் மற்றும் பொது மக்களிடையே தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிந்தது. அண்மைய காலங்களில் ஒரு தேசமாக நாம் பெருமைப்படக்கூடிய விடயமாக ஒருமனதுடன் "தொற்றுநோயை ஒழிக்க நாங்கள் உறுதியாக இருந்தால், நடமாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னரும் நாம் தற்போதைய நிலையை தொடர்வதற்கு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர வேண்டும் என குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தல் நடைமுறைகள், இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் செயல்பாடு மற்றும் தற்போதைய தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆகிய அனைத்து வழிமுறைகளும் வைரஸ் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறினார். அதேபோல் இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) மற்றும் கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) இணைந்து முன்னெடுத்த கொவிட் நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கும் திட்டமான தொலைபேசி எண் 1904 மற்றும் வைத்தியர் அழைப்பு 247 ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை நிரூபித்தது உயிர்களை காப்பாற்ற நிறைய உதவியுள்ளது. வீட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடையே பயன்படுத்த ஒக்ஸிமீட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்கி திட்டத்தை தொடங்கியதற்காக நான் இலங்கை மருத்துவ சங்கத்திற்கு SLMA நன்றி சொல்ல வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் முன்னேற்றம், விமான நிலையத்தில் புதிய தனிமைப்படுத்தல் நடைமுறைகள், இளையவர்களுக்கான தடுப்பூசி வழங்கல், தற்போதுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முடிவடைந்த பிறகு அறிமுகப்படுத்தப்படும் புதிய சாதாரண நடைமுறைகள், சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகள் ஆகியவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. ஜனாதிபதி பணிக்குழு இன்று (24) காலை நிதியமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய கட்டுப்பாடுகள் அக்டோபர் 1 ஆம் திகதிக்கு பிறகு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்வது அல்லது நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவரின் வழிகாட்டுதலின் படி தீர்மானிக்கப்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி , பொதுக் கூட்டங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்திய நீண்டகால தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் நேரடி விளைவாகும், மேலும் பொது போக்குவரத்தின் இன்மையே வீதிகளில் அதிக தனியார் வாகனங்கள் காணப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போதுமான தடுப்பூசிகள் காணப்படுவதாகவும் 2.7 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி கிடைக்ப்பெற்றுள்ளதாகவும், தடுப்பூசி பெற இளைஞர்களிடையே ஆர்வம் இல்லாமை, விமான நிலையத்தில் திருப்பி அனுப்பும் திட்டம் மற்றும் பீசிஆர் பரிசோதணை தொடர்பில் விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பாடசாலைகளை திறத்தல், தனிமைப்படுத்தல் ப்பட்ட ஊரடங்கு சட்டத்தை நீக்கிய பின் வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கான கடுமையான முன்னெச்சரிக்கைகள் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துதல் போன்றவை இந்த அமர்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்ட பிரச்சனைகளாகும்.

ஆரம்பத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் கொவிட் -19 இன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த முன்னேற்றங்களைச் சுருக்கமாக விளக்கினார். மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (டி.ஜி.எச்.எஸ்) மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.