கம்பஹா பிரதேசத்தில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி மற்றும் சீனி விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கம்பஹா மாவட்ட விசாரணை பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.122 இற்கு விற்பனை செய்ய வேண்டிய 1 கிலோ கிராம் சீனியை ரூ.160 இற்கும், ரூ.98 இற்கு விற்பனை செய்ய வேண்டிய 1 கிலோ கிராம் நாட்டரிசியை ரூ.120 இற்கும் விற்பனை செய்தமைக்காக இவர்கள் மீது மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை பிரிவு தலைவர் ரஞ்சித் வீரவர்தன தெரிவித்தார்.

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.