வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவரிடமிருந்து சுமார் நான்கு மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சதொசவில் இடம்பெற்ற வெள்ளைப் பூண்டு மோசடி தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அளித்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன விசாரணை கோரி பொலிஸ்மா அதிபரிடம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக C.I.D. தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.