டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

2014-ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்காக ஆடி வரும் மொயின் அலி இதுவரை 64 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 195 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கும் அவர் 5 சதங்களை அடித்திருக்கிறார்.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இணையதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மொயின் அலி, " இப்போது எனக்கு 34 வயதாகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிந்ததைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். அது பற்றி எனக்கு மகிழ்ச்சியே" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின்போது, இனி டெஸ்ட் போட்டிகளை ஆட விருப்பமில்லை என்று கூறியிருந்தார் மொயின் அலி.

பிபிசி தமிழ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.