அநுராதபுரம் மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை அச்சுறுத்தி சித்திரவதை செய்ததாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்றும் எவரும் அச்சப்பட தேவையில்லை என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் இந்நிலையில் இவ்வாறு சம்பவங்கள் இடம்பெறுவது மோசமான நிலையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.