பாடசாலைக் கல்வியுடன் , தொடர்ச்சியாக இருந்த பாடசாலை மாணவர்கள்,தற்போது கையடக்கத்தொலைபேசி பயன்பாடு காரணமாக சுமார் 10 வீதமான சிறுவர்கள் பல்வேறு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் அயேஷா லொக்கு பாலசூரிய தெரிவித்தார்.

ஜூம் (ZOOM) தொழில் நுட்பத்தின் ஊடாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்களின் போது இவ்வாறான விடயங்கள் தெரியவந்துள்ளதாக தெரிவித்த அவர், சில சிறுவர்கள் நாளொன்றுக்கு அதிக நேரம் கையடக்கத்தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். பணத்திற்காக சில சிறுவர்கள் இணைய தள விளையாட்டில் ஈடுபட பழகியுள்ளனர்  போன்ற விடயங்களும் இதனூடாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சில சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் கடன் அட்டைகளை பயன்படுத்தி இந்தக் கட்டணங்களைச் செலுத்துகின்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்களை மிக விரைவாக பாடசாலைக் கல்விக்கு உட்படுத்தப்படா விட்டால் நாம் மிகவும் துரதிர்ஷ்டமான சூழ்நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் இருந்து குழந்தைகளை மீட்டு, மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தற்போது விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே இதற்கான பரிந்துரைகளை தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வேலைத் திட்டமானது, ஜூம் (ZOOM) தொழில்நுட்பத்தினூடாக சிறுவர்களை நெருங்கி அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கும், அதன் மூலம் சிறுவர்களை மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் விசேட வைத்தியர் பாலசூரிய வலியுறுத்தினார்.

பாடசாலைகள் ஆரம்பமானதன் பின்னர், இந்த வேலைத்திட்டத்தை ஆசிரியர்களின் ஊடாக மாணவர்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.