இந்த நாட்டில் முஸ்லிம்களே உண்மையான இராஜதந்திர அரசியலை முன்னெடுத்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை ஒரு இரவில் தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ள நிலையிலும் நல்லிணக்க அரசியல் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முன்னெடுக்கும் அரசியலே அதற்கு தடையாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதி வழங்கும் நடவடிக்கை இன்று நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 24பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதி இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இதன்மூலம் 24 வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.