ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை பின்னர் ஏற்பட்ட இதயப் பிரச்சினை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனைகளுக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு செய்யப்பட்ட இதய சத்திர சிகிச்சையில் சிக்கல்கள் உருவாகியுள்ளமை தெரியவந்தது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மேலுமொரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரபல இருதயநோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க மற்றும் அவரது குழுவினரால் சிக்கலான இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.