நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி.
இந்தத் தருணத்தில், நான் ஒரு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என்ற முறையில், நம் நாட்டின் மூத்த அரசியல்வாதியான மங்கள சமரவீரவின் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரின் இழப்பு தனிப்பட்ட ரீதியாகவும் நாட்டுக்கும் போரிழப்பாகும்.நாட்டிற்கு அவரின் சேவை தேவைப்பட்ட ஒரு தருனத்தில் மரணித்துள்ளார்.அவருக்கு ஒரு தூர நோக்குப் பார்வை இருந்தது. அன்று அவர் சொன்ன அனைத்தும் இன்று உண்மையாகிவிட்டது. திரு மங்கள சமரவீர, உருவாக்க விரும்பிய இலங்கையை உருவாக்க தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் குழு பல கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.ஒரு நாள் சரியான இடத்திற்கு இந் நாடு வர வேண்டும் என்பதுவே அவரின் இலக்காக இருந்தது.இனம், மதம், சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டை உருவாக்குவதே அவரின் பார்வையாக இருந்தது.
நான் இந்த சந்தர்ப்பத்திற்கு வந்தபோது, இலங்கை எங்கே இருக்கிறது என்று மக்கள் எப்போதும் விமர்சிப்பதை நான் பார்த்தேன்.இலங்கையின் நாமம் எங்கெல்லாம் இருந்தது என்று கேள்விப்பட்டது எனக்கு ஞாபகம் வருகிறது.இலங்கை செவனகல மற்றும் கந்தளாய் என்ற இரு சீனி ஆலைகளைக் கொண்ட நாடு. இந்தியா மற்றும் நைஜீரியாவுக்கு டயர்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு. களனி டயர்களைக் கொண்ட ஒரு நாடு, புத்தளம், காலி, காங்கேசன்துறை ஆகியவற்றில் பெரிய அளவிலான சீமேந்து தொழிற்சாலைகளைக் கொண்டிருந்த நாடு. இலங்கை ஏழு கப்பல்களைக் கொண்ட நாடு. ஒருவாலவில் எஃகு தொழிற்சாலைகள் இருந்த நாடு. 1950 ஆம் ஆண்டில் ஆசியாவின் இரண்டாவது வளர்ந்த நாடாக இலங்கை இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு மேலதிகமாக இருந்ததால் இங்கிலாந்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு கடன் வழங்கிய நாடு.இன்று 70 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் எதைச் செய்ததாக மக்கள் இப்போது குற்றம் சாட்டுகின்றனர். நிச்சயமாக நான் ஒரு அரசியல்வாதியாக இங்கே ஆம் என்று சொல்கிறேன். திரு. மங்கள சமரவீர மற்றும் நான் இந்த அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களால் தான், ஒரு அரசியலுக்காக, மதவாதம், இனவாதம், சாதி வெறி மற்றும் குடும்பவாதம் ஆகியவை நாட்டின் அரசியலை அழித்துவிட்டன என்பதை நான் கூறுகிறேன். யாரையும் ஜனாதிபதியாக்கக்கூடிய ஊடகங்கள் இருப்பதால் பொதுமக்கள் தவறாக இருக்க முடியாது. ஊடகங்கள் எந்த சாக்கடையனையும் ஜனாதிபதியாக்கும் திறனைக் கொண்டுள்ளன. எனவே, நாங்கள் பொதுமக்களை தவறாக சொல்லத் தயாராக இல்லை. மங்கள சமரவீர மரணித்துருக்கலாம் ஆனால் அவரின் தொலைநோக்கு ஒரு நாளும் மரணிக்காது. அவருடைய தூர நோக்கு இறப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மங்கள சமரவீரவின் தத்துவமே நாட்டிற்குப் பொருத்தமானது என்பதை நான் பயம் இல்லாமல் கூறுகிறேன்.
இன்று "இல்லை" மற்றும் "இயலாது" என்று சொல்வதைத் தவிர இந்த நாட்டில் வேறு ஒன்றும் இல்லை. அரிசி இல்லை, உரம் இல்லை, பால் இல்லை. சீனி இல்லை, கல்வி இல்லவே இல்லை,ஆரோக்கியம் இல்லை, மருந்து இல்லை.ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டு பிடிக்க இயலாது, டொரால் மதிப்பிழப்பை நிறுத்த இயலாது,மத்திய வங்கி மோசடியை கண்டுபிடிக்க இயலாது, பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது, ஆர்ப்பாட்டங்களை தீர்க்க சூமூகமாக தீர்க்க இயலாது, இந்த அரசாங்கத்தால் முடியாது, வேறு எதுவும் செய்ய முடியாது. இன்று இந்த நாட்டு மக்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர். சீனி இல்லை, குறைந்தபட்சம் கழிப்பறை கமோட் கூட இல்லை. ஒரு கார் பழுதடையும் போது உதிரி பாகங்கள் இல்லை மக்கள் மட்டுமல்ல பாடசாலை மாணவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை கண்டியில் உள்ள ஒரு பாடசாலை மாணவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றை மேற்கேள் காட்டினார், “இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதுகிறேன்,பாடவிதானங்கள் பூரணப்படுத்தப்படவில்லை.பெரும் பகுதி பிரயோக ரீதியானது அது குறித்த எந்த கற்ப்பித்தலும் இடம் பெறவில்லை.ஒரு தவனை பரீட்சை மாத்திரமே இடம் பெற்றுள்ளது.இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்று எழுதியுள்ளார்.சேர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, சேர் கட்டமைக்கப்பட்ட கட்டுரை வினாத்தாள்களை நடைமுறையில் எழுத வேண்டும் ஆனால் மிகவும் நடைமுறைக்குரிய விடயங்கள் கற்றலில் இல்லை. ஆசிரியர்கள் 45 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏழை குழந்தைகளுக்கு டியூஷனுக்கு செல்ல வழியில்லை பல பெற்றோர்களுக்கு தற்போது வகுப்புகளுக்கு பணம் கொடுக்க பணம் இல்லை அதனால் அவர்கள் குழந்தைகளை டியூஷனுக்கு அழைத்து செல்வதில்லை. 2021 A / L மாணவர்கள் தான் அதிக அழுத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் பாடத்திட்டத்தை யாரும் முடிக்கவில்லை சேர் குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.இந்த குழந்தை அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறேன்,அதை வைத்துப் பார்க்கும் போது இன்று இந்த நாட்டில் ஒரு பெரிய பிரச்சனை இருப்பதற்கு வருந்துகிறேன்.
சரியான நேரத்தில் தடுப்பூசிகளை கொண்டு வராமைக்கு எதிர்க்கட்சிகள் பொறுப்பேற்க வேண்டுமா? சரியான நேரத்தில் நாட்டை மூடவில்லை என்பதையும் நாங்களா பெறுபோற்க வேண்டும். வெட்கமில்லாத சுய-விளம்பரங்களுக்கும் அரசியலுக்குமான நேரம் அல்ல.
ஒரு மனிதன் எதையாவது விமர்சித்தால், அரசாங்கம் அவனை அடுத்த நாள் சிஐடிக்கு அழைத்துச் செல்லுகிறது. ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேசிய இளைஞனை CID க்கு எட்டாவது நாளாக அழைத்துள்ளனர்.
அசேலா சம்பத்தை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறார்கள்.அவர் அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது சொன்னால் அவர் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
(Siyane News)
විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීවවිපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීව
Posted by SJB - Api on Thursday, September 2, 2021